| 245 | : | _ _ |a சின்னையன் பேட்டை குளம் - |
| 300 | : | _ _ |a பிற கட்டுமானம் - நீர் நிலை கட்டுமானம் |
| 500 | : | _ _ |a 120 சதுர அடி பரப்பளவு கொண்ட இக்குளம் 16-17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியை ஆண்ட சின்னைய நாயக்கன் அல்லது சின்னம நாயக்கன் என்பவன் தனது மகளின் பயன்பாட்டுக்காக இக்குளத்தைக் கட்டியதாகக் கருதப்படுகிறது. இக்குளம் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இணைவிழைச்சு சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக குளத்தின் படிக்கட்டுகளில் செதுக்கப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a 1. தொல்லியல் சுற்றுலா, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. |
| 520 | : | _ _ |a திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தானிப்பாடி என்ற ஊருக்கருகில் சின்னையன்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்த குளத்தை சின்னையன் குளம் என்றும் அழைக்கின்றனர். இந்தக்குளத்தின் படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர்களில் பூக்கள், விலங்குகள், பறவைகள், கடவுள்களின் உருவங்களும், ராமாயணம், மகாபாரத காட்சிகளும், இயற்கைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆண்-பெண் இணைவுக் காட்சிகள் காதல் சிற்பங்களாக வாழ்வியல் நோக்கில் வடிக்கப்பட்டுள்ளன. இணைவிழைச்சுக் காட்சிகளை சிற்பங்களாக வடிப்பது நாயக்கர் காலத்தில் ஏற்றம் பெற்றிருந்தது எனக்கூறலாம். சின்னையன் என்னும் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன் தன் மகளின் நல் இல்லற வாழ்விற்காக, அவளுக்கு இவ்வெழுச்சிகளைத் தூண்டும் பொருட்டு, இந்த அழகிய குளத்தினைக் கட்டி அதன் படித்துறைகளில் இவ்வாழ்வியல் சிற்பங்களை வடித்துள்ளான் என்பது செவிவழித் தகவலாக நிலவி வருகின்றது. |
| 653 | : | _ _ |a சின்னையன் குளம், சின்னையன் பேட்டை, காதற் காட்சிகள், வாழ்வியல் சிற்பங்கள், குளக்கரைச் சிற்பங்கள், திருவண்ணாமலை, சின்னையன், சிற்பக்குளம் |
| 710 | : | _ _ |a இலக்கியா |
| 752 | : | _ _ |a சின்னையன் பேட்டை குளம் |c சின்னையன் பேட்டை |d திருவண்ணாமலை |f தண்ட்ராம்பட்டு |
| 906 | : | _ _ |a கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.0941296 |
| 915 | : | _ _ |a 78.8055325 |
| 934 | : | _ _ |a திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், தானிப்பாடி நடுகல், செஞ்சி கோட்டை, மோதூர் தாய்த் தெய்வக்கல் |
| 995 | : | _ _ |a TVA_MON_00008 |
| barcode | : | TVA_MON_00008 |
| book category | : | பிற கட்டுமானங்கள் |
| cover | : |
|
| Primary File | : |